தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை ஆண்டுகள் செல்லும் என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக, இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அதில், “இலங்கைக்கு சீனா ஓரளவு உதவுகிறது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதால் கிடைக்க வேண்டிய பிரதான உதவிகள் கிடைக்கவில்லை.

எனவே, நன்கொடையாளர் மாநாட்டில் சீனாவுடன் ஓர் உரையாடலை மேற்கொள்ள முயல்கிறேன். விரைவில் அதை நடத்த விரும்புகிறேன்..

1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நாணய மாற்றத்தை மேற்கொள்ள விடுக்கப்பட்ட கோரிக்கையை சீனா நிராகரிப்பதாக தெரிவித்த நிலையில், இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்தது.

சில முன்னாள் அமைச்சர்கள், பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் பிரதமர் பதவியை ஏற்காமையால் அதை நான் ஏற்றுக் கொண்டேன்.

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை நிவர்த்தி செய்ய நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பிணை எடுப்பதை அரசாங்கம் நாடுகிறது என்றாலும், நடந்துகொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண நன்கொடையாளர் முகவர் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்” என தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version