நாட்டில் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.

நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நிற்பதனால் மக்கள் உயிரிழக்கும் சந்தர்ப்பமும் நடந்தேறிய வண்ணமே  உள்ளது.

இந்நிலையில், பாணந்துறையில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பாணந்துறை வெகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version