தாயினால் களனி ஆற்றில் தள்ளப்பட்டதாகக் கூறப்படும் சிறுவனின் சடலம் வென்னப்புவ – தெற்கு வாய்க்கலை பகுதியில் குவிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி தாய் தனது 05 வயது மகனை களனி ஆற்றில் தள்ளிவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சிறுவனின் சடலம் நேற்று 17ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சிகப்பு நிற டீ சேர்ட்டும், கோடுகள் போட்ட கட்டை காற்சட்டையும் அணிந்திருப்பதோடு, காலணியும் அணிந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தனது தாயினால் ஆற்றில் வீசப்பட்ட சிறுவனைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் கடற்படை சுழியோடிகள் பிரதேச மக்களுடன் இணைந்து கடந்த 15ம் திகதி முதல் களனி ஆற்றில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சடலம் தற்போது மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.