Site icon ilakkiyainfo

இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்கத் திட்டம் – எரிசக்தி அமைச்சர்

இலக்கத்தகட்டின்  கடைசி இலக்கத்தின் அடிப்படையில், தனியார் வாகனங்களுக்கான எரிபொருளுக்கான ஒதுக்கீட்டு முறையை அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து, முச்சக்கர வண்டிகள், பிற போக்குவரத்துச் சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு ஏற்கனவே பல்வேறு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன அல்லது பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், தனிப்பட்ட பாவனைக்காகப் பயன்படுத்தப்படும் தனியார் வாகனங்களுக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தனியார் வாகனங்களுக்கும் எரிபொருள் பெற வாரத்தில் 2 நாட்களை ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். உதாரணமாக, வாரத்தின் இரண்டு நாட்கள் இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படும்” என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

“எனவே, உதாரணமாக, இலக்கத்தகட்டில் 0,1 மற்றும் 2 என கடைசி இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் திங்கள் மற்றும் வியாழன்களில் எரிபொருளைப் பெற அனுமதிக்கப்படலாம். மற்ற இலக்கங்களுக்கும் இதுவே செல்கிறது” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த செயல்முறை இன்னும் முடிவடையவில்லை, இருப்பினும் வரையறுக்கப்பட்ட எரிபொருள் இருப்புகளை நிர்வகிக்கவும், எரிபொருள் வரிசைகளில் அவசரத்தை குறைக்கவும் இதேபோன்ற ஒன்று செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Exit mobile version