சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இளைஞர் ஒருவர் யாழ். மானிப்பாய், சோதிவேம்படி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதிவேம்படி ஒழுங்கையிலுள்ள வீடொன்றை நேற்றிரவு சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அங்கிருந்த 630 லிட்டர் டீசலை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாயை சேர்ந்த 27 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர், மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.