எம்பிலிப்பிட்டிய – மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மித்தெனிய வீதியின் தோரகொலயாய பகுதியில் உள்ள மலர்சாலை உரிமையாளர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இன்று (26) முற்பகல் 9.30 மணியளவில் மலர்சாலையை திறப்பதற்காகச் சென்ற வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version