இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் இன்றையதினம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

வடமாகாணத்திலுள்ள ஏழு சாலைகளில் பணியாற்றும்  சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் கடமைக்கு செல்வதற்கான பெற்றோலினை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக தமக்கான பெற்றோலினை உரிய முறையில் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்து ஏழு சாலைகளை சேர்ந்த சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் வவுனியா சாலை ஊழியர்களும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வவுனியா சாலைக்குரிய பேருந்துகள் கடமைக்கு செல்லாது இ. போ.ச வவுனியா சாலையில் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை தமக்கான உரிய தீர்வினை பெற்றுத்தரும் வரை இப்பணிபகிஸ்கரிப்பு தொடரும் என சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இப் பணிபகிஸ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version