Site icon ilakkiyainfo

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 54 பேர் படகுடன் கைது

சட்டவிரோதமாக 54 பேரை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச்சென்ற படகொன்றை இலங்கை கடற்படையினர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேரும் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே குறித்த 54 பேரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை திருகோணமலை – துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version