அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்றில் ஆண் ஒருவர் மீது இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டவரை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த அரிசி ஆலையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்கு இருவரும் ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திய நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக ஓருவர் மீது ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்டதில் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய வரை கைது செய்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்