பொலன்னறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 600 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழ் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சுமார் 1,000 கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மோதலில் 600 கைதிகள் தப்பியோடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாரும் இராணுவத்தினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏனைய கைதிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும், பொலிஸாரையோ பாதுகாப்புப் படையினரையோ  நுழைய அனுமதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version