யாழ்ப்பாணம், காரைநகரில் கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

காரைநகர் ஜே/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படை முகாம் அமைக்கவென அளவீடு செய்யும் முயற்சி 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அதனை அடுத்து அங்கு கூடிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் எதிர்ப்பினால் காணி அளவீட்டு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version