கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பிரசவித்தமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாவது சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

டக்வாரி தோட்டத்தை சேர்ந்த 58 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 47 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

13 வயது சிறுமி குழந்தை பிரசவித்துள்ள நிலையில், மீண்டும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரங்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version