மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்தருகில் கனரக லொறி வண்டி ஒன்று வீதியைவிட்டுவிலகி வலையிறவு ஆற்றில் வீழ்ந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் இரண்டு லொறிகள் ஒரே நேரத்தில் பயணித்த போது , ஒரு லொறியை மற்றய லெறியை முந்திச் செல்ல முற்பட்ட போது இச்சம்பவம் இடம் பெற்றதாக தெரியவருகின்றது.
சம்பவ இடத்திற்கு வவுணதீவு பொலிஸார் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.