4 கோடி ரூபா பெறுமதியான தங்கப் பாலங்களுடன் இலங்கையர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை டுபாயிலிருந்து வந்த விமானம் மூலமே குறித்த நபர் இலங்கை வந்துள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கபாலங்களின் பெறுமதி 4 கோடியே 72 இலட்சத்து 11 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.