யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்து 59 ஆயிரத்து 177 ரூபா பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் சற்று முன்னர் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மூவரும் யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்து உமையாள்புரம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.

அவர்கள் இறங்குவதற்காக நடத்துனர் இடம்விட முற்பட்டபோது அவரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்த பணத்தினைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

அவர்கள் இறங்கிய இடத்தில் வேறு சிலரும் காத்திருந்ததாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version