இலங்கையிலிருந்து கடந்த மாதம் 27 ஆம் திகதி படகு மூலம் தனுஷ்கோடி சென்ற தம்பதியரில், வயதான தாய், உயிரிழந்துள்ளார்.

குறித்த இருவரும் கடற்கரையில் மயக்கமுற்றிருந்த நிலையில், மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

குறித்த வயோதிப தம்பதிகளில் பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் சிகிச்சை பலனின்றி நேற்று (2) சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன் ஆகிய வயோதிப தம்பதிகள் இருவரும் கடந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையில் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)

Share.
Leave A Reply

Exit mobile version