கிளிநொச்சி நகரை அண்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  31 பரல்களில் டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நகருக்குள் சட்டத்துக்கு முரணான வகையில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்தமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல்களின் அடிப்படையில் இன்று (03) திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த  31 பரல்களில் டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டன.

இதனையடுத்து சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version