பொலன்னறுவை – லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக பெண் அதிகாரியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
குறித்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த அந்த அதிகாரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் அறையில் நபர் ஒருவர் இருப்பதைக் கண்டதாகவும் ஆனால் இருள் காரணமாக அவரை அடையாளம் காண முடியவில்லை என்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் விசாரணையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.