முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் தாக்கப்பட்டு, நேற்றிரவு(05) கடத்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் , வள்ளிபுனம், தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை டிப்பரில் கடத்திச் சென்று கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கடந்த வாரம் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது கல்லாற்று பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் மூன்று இளைஞர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை இளைஞர் குழு ஒன்று டிப்பரில் மூன்று இளைஞர்களையும் கடத்தி சென்ற வேளை விசுவமடு பகுதியில் பாலத்தில் மோதி டிப்பரின் டயர் வெடித்துள்ளது.
இதன்போது கடத்தப்பட்ட இளைஞர்களையும் டிப்பருக்குள்ளேயே விட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கடத்தப்பட்ட இளைஞர்கள் டிப்பர்லிருந்து மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.