இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை, விசைப் படகை பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடந்த 30 தேதி மயிலாடுதுறை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 3ம் தேதி நள்ளிரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு பருத்திதுறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிசாந்த் பொன்னுத்துரை, ”மீனவர்கள் 12 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்த்து” உத்தரவிட்டார்.

அதேநேரத்தில், ”மீனவர்கள் சென்ற பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகை அரசுடமையாக்கி’ தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version