மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் தற்போது அமுலிலுள்ள 3 மணிநேர மின்வெட்டை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

 

அதன்படி, எதிர்வரும் ஏழு நாட்களுக்கு 3 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும்.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அத்துடன் M,N,O,X,Y,Z ஆகிய பகுதிகளில் காலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியினுள் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version