இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற ஆறு பேர் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள மணல் திட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு படகு மூல அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றவர்கள் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள மணல் திட்டில் அவர்களை இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இரண்டு ஆண்கள் , இரண்டு பெண்கள் , இரண்டு சிறுவர்கள் என ஆறு பேரே அவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.