கொழும்பு விமானநிலையத்திலிருந்து நான்கு பேருடன் புறப்பட தயாரான விமானத்திற்கு மாலைதீவில் தரையிறங்குவதற்கான அனுமதி கிடைக்காததால் சில மணிநேரம் குழப்பம் நிலவியதாக  ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஏ.எவ்.பி மேலும் தெரிவித்துள்ளதாவது.

கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட  அன்டொனோவ் 32 விமானத்தில் 73 வயது கோத்தபாய ராஜபக்சவும் அவரது மனைவியும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் காணப்பட்டனர் என குடிவரவுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களது கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் விசேட விமானப்படை விமானத்தில் ஏறினார்கள் என இந்த நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்த குடிவரவுதுறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மாலைதீவிற்கு செல்வதற்கான அனுமதி கிடைக்காததால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விமானம் ஓடுபாதையில் ஒரு மணிநேரத்திற்கு மேல் தரித்துநின்றது பதற்றமான நிலைமை காணப்பட்டது இறுதியில் அனைத்தும் சரியாகவிட்டன தன்னை பெயர் குறிப்பிடவிரும்பாத விமானநிலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version