இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரி, மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையை சேர்ந்தவர்களும், மாலைதீவைச் சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு அரசாங்கம் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள இலங்கையர்கள் ‘“அன்புக்குரிய மாலைதீவு நண்பர்களே குற்றவாளிகைளை பாதுகாக்க வேண்டாமென உங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துங்கள்” என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.