ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 13 ஆம் திகதி அதிகாலை வேளையில் விமானப்படைக்கு சொந்தமான அன்ரனோவ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலை தீவுக்கு தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷ அங்கு தங்கியிருந்தார்.

இந்நிலையில், இன்று (14) காலை மாலைதீவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சொந்தமான எஸ்.வி.788 என்ற விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ புறப்பட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சிங்கப்பூர்நோக்கி தற்போது பயணிக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து சவுதி அரேவியாவின் ஜெத்தாவுக்கு செல்லவுள்ளதாக மாலைதீவு அரசாங்கத்தின் உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version