கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறார். இன்று அவர் எப்படியும் சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அங்கு மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இடையில் சில நாட்கள் போராட்டம் நடக்காத நிலையில், அங்கு மீண்டும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இலங்கை அதிபர் மாளிகை தற்போது போராட்டகாரர்களின் டூரிஸ் ஸ்பாட் போல மாறி உள்ளது. அதேபோல் அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தையும் மக்கள் கைப்பற்றி உள்ளனர்.
அதிபர் இந்த நிலையில் இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
நேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டியது. இருந்தாலும் அவர் முறைப்படி இன்னும் ராஜினாமா கடிதத்தை அனுப்பவில்லை.
அவர் அதிபராக இருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்கு எளிதாக தப்ப முடியும் என்பதால் ராஜினாமா கடிதத்தை அளிக்காமல், அதிபர் என்ற பவரை வைத்துக்கொண்டு வெளிநாடு தப்ப இருக்கிறார். நேற்று இதை பயன்படுத்தியே அவர் மாலத்தீவு சென்றார்.
மாலத்தீவு போராட்டம்
இவர் மாலத்தீவில் இருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்தனர். மாலத்தீவில் இதையடுத்து மக்கள் போராட்டம் செய்ய தொடங்கினார்.
கோத்தபாய ராஜபக்சே வெளியேற வேண்டும் என்று போராட்டம் செய்ய தொடங்கினர். அங்கு இருக்கும் சிங்கள மக்களும் கோத்தபாய ராஜபக்சேவிற்கு எதிராக போராட்டம் செய்தனர்.
இதன் காரணமாக கோத்தபாய ராஜபக்சே அங்கிருந்து வெளியேற முடிவு செய்தார்.
துபாய் மறுப்பு
இவர் துபாய் செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கோத்தபாய ராஜபக்சேவிற்கு துபாய்கான அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அவரை துபாய் வர வேண்டாம் என்று அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. துபாய் கோத்தபாய ராஜபக்சேவை ஏற்க மறுத்ததால் சிங்கப்பூர் செல்ல திட்டம் போட்டுள்ளார்.
சிங்கப்பூர் விமானம்
இந்தியா, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கான டிக்கெட் கோத்தபாய ராஜபக்சே வசம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் சிங்கப்பூர் செல்லும் SQ437 என்ற விமானத்தையும் அவர் மிஸ் செய்துள்ளார். மாலத்தீவு தூதரக அதிகாரிகள் இமிக்ரேஷனுக்காக இவரின் அறைக்கு செல்ல மறுத்துள்ளனர்.
இதனால் அவர் மக்களோடு மக்களாக லைனில் சிங்கப்பூர் இமிக்ரேஷனுக்கு நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தவிப்பு
ஆனால் அது ஆபத்து என்பதால் போராட்டக்காரர்களுக்கு அஞ்சி ரூமிலேயே முடங்கி உள்ளார் கோத்தபாய ராஜபக்சே.
வெளியே சென்றால் போராட்டக்காரர்கள் தாக்கலாம் என்ற அச்சத்தில் இவர் இருக்கிறாராம் .
இதன் காரணமாக சிங்கப்பூர் செல்லும் விமானத்தை அவர் கடைசி நேரத்தில் மிஸ் செய்துள்ளார்.
தற்போது மாலத்தீவு அரசிடம் இவர் தனி விமானம் ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூர்
தனி விமானத்தில் இன்று சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோத்தபாய ராஜபக்சேவை வெளியேற சொல்லி மாலத்தீவு மக்கள் தீவிர போராட்டம் செய்து வருகிறார்கள்.
இதனால்தான் கோத்தபாய ராஜபக்சே எங்கே செல்வது என்று தெரியாமல் குழம்பி உள்ளார்.
சிங்கப்பூரில் தமிழர்கள் நிறைய பேர் இருப்பதால் அங்கும் இவரை அரசு ஏற்றுக்கொள்ளுமா, அங்கு மக்கள் போராடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.