உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், அரசாங்கம் முன்வைத்துள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும் .

16 நாட்களுக்கு முன்னர் உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை145 டொலராக காணப்பட்டது. எனினும், தற்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்‍ணெயின் விலை 104 டொலராக குறைந்துள்ளது. ஆகவே, அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும்.

அனைத்து வரிகளையும் வசூலித்ததன் பின்னர், 92 ஒக்டேன் பெற்றோலின் விலையை தற்போதுள்ள விலையிலிருந்து 110 ரூபாவாலும்,  95 ஒக்டேன் பெற்றோலின் விலையை 120 ரூபாவாலும் குறைக்க முடிவதுடன், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 120 ரூபாவினாலும் குறைக்க முடியும்” என்றார்.

இந்த விலை குறைப்புக்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நஷ்டத்தையும் ஏற்படுத்தாது என அவர்  மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version