நபர் ஒருவர் கட்டியணைக்க இலங்கை மதிப்பில் சுமார் 30, 000 ரூபாய் கட்டணம் அறவிடும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் வசித்து வரும் ட்ரெவர் ஹட்டன் (Trevor Hooton) என்ற 30 வயதான இளைஞர் கட்டிப்பிடிப்பதை ஒரு தொழிலாக செய்து வருகின்றார்.

சுமார் ஒரு மணி நேரம் ஒருவரை கட்டியணைத்துக் கொள்வதற்கு, 75 பவுண்டுகள் அதாவது இலங்கை மதிப்பில் 31,533.90 ரூபாய் வரை கட்டணமாக அவர் வசூலித்து வருகிறார்.

இத்துடன் உறவு சிக்கல்களை தீர்க்கவும், பலமான உறவை வளர்த்துக் கொள்வது குறித்தும் பல அலோசனைகளை அவர் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ட்ரெவர் “கட்டியணைப்பது என்பதைத் தாண்டி ஒருவரைத் தொடுதல் மூலம் அவருக்கு அன்பு, பாசம் மற்றும் அக்கறையும் கொடுக்க முடியும்.

இச் சேவையை எல்லோராலும் நிச்சயம் புரிந்து கொள்ள முடியாது. சிலர், நேரடியாகவே என்னிடம் நீங்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறி இருக்கிறார்கள்.

மனித உறவுகளை உருவாக்க வேண்டும் என்ற ஆரோக்கியத்தின் அடிப்படையில் தான் இதனை ஒரு தொழிலாகவே நான் ஒரு மாற்றிக் கொண்டேன்.

பலரும் இந்த மனித உறவுகளை உருவாக்க தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், இந்த சேவையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என நான் விரும்பினேன்.

ஆரம்பத்தில் பலரும் இதனைச் சற்று அருவருப்புடன் தான் எதிர் கொண்டார்கள். ஆனால், நேரம் செல்ல செல்ல இது அவர்களுக்கு சற்று சாதாரணமாகவே தெரிந்தது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version