ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்ற நிலையில் இன்றையதினம் பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ள நிலையில் தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.

இந்நிலையில், 15 ஆவது பிரதமராக தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.

கல்வி அமைச்சராக சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடற்றொழில் வளங்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சுகாதாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்‌ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சராக ரமேஷ் பத்திரன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சராக அலி சப்ரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சராக விதுர விக்கிரமநாயக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக காஞ்சன விஜேசேகர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சுற்றாடற்றுறை அமைச்சராக நஸீர் அஹகமட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சராக மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக நளின் பெர்னாண்டோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

உள்ளூராட்சி மற்றும் அரச நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியால் தற்காலிக அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply

Exit mobile version