தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த பாடசாலை மாணவியின் சடலம், பிர​தேசவாசிகளின் தகவல்களை அடுத்து நேற்று (22) மாலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை பெயார்பீல்ட் (மிளகுசேனை) தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய முத்துரட்ணம் ஜீலோஜினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி தனியார் வகுப்புக்காக, தலவாக்கலை நகரத்துக்குச் செல்வதாக கூறிவிட்டு, நேற்றுக்காலை வந்ததாக  அவரது உறவினர்கள் வாக்குமூலமளித்துள்ளார்.

அந்த மாணவின், இவ்வருடம் இடம்பெறவிருக்குமு் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித் பொலிஸார், பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நுவரெலியா நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version