யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எரிபொருளை சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை, 15 நிரப்பு நிலையங்களில், பெற்றோல் விநியோகிப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (21) ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 25 ஆம் திகதிரை, 7 முதல் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களில், டீசலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பலரும் எரிபொருள் பங்கீட்டு அட்டை முறைமையின் நன்மைகளை வரவேற்கும் சமயம் ஒரு சிலர் இந்த திட்டத்தை குழப்புவதற்கு முனைவதையும் நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ஆகவே அனைவரும் ஒத்துழைத்து இந்த முறைமை மூலம் சீரான எரிபொருள் விநியோகத்தை வழங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.