பெங்களூரு: தாலி கட்டிய அடுத்த சில நிமிடங்களிலேயே மணமகன் மயங்கிவிழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன.. அதில் ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்

இதனால் மணமேடை வரை வந்து திருமணங்கள் நின்றிருக்கின்றன.. அதேபோல, திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.

அதிர்ச்சி
ஆனால், கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவம், அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹொன்னூறு சாமி.. இவருக்கும் இதே கிராமத்தை சேந்த பெண்ணுக்கும் சமீபத்தில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் ஆனது.. அங்குள்ள சுடுகாடப்பா சுவாமி கோலிலில் திருமணம் செய்ய முடிவானது.. ஊர் முழுக்க பத்திரிகைகளும் தரப்பட்டுவிட்ட நிலையில், கல்யாண ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன..

ரிசப்ஷன்
நிச்சயக்கப்பட்ட தினத்தில் அதே கோவிலில் ஊர்மக்கள் முன்னிலையில், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார் மாப்பிள்ளை.. திருமணம் முடிந்த கையோடு ரிசப்ஷன் ஏற்பாடானது.. அதனால், மணமக்கள், கைகோர்த்து, அதே மேடையில் நின்றனர்..

மணமக்கள் இருவருமே மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.. பிறகு திடீனெ மாப்பிள்ளை மட்டும் சகஜமாக காணப்படவிலை.. மேடையிலேயே சேரில் உட்காருவதும், எழுவதுமாக அவஸ்தைப்பட்டார்.. மயங்கிவிழுந்தார்

மயங்கிவிழுந்தார்
அவருக்கு திடீரென நெஞ்சு வலி வந்துள்ளது.. இதனால், வலி பொறுக்க முடியாமல், தன்னுடைய குடும்பத்தினரை அழைத்து நெஞ்சு வலிப்பதாக சொன்னார்..

ஒருவேளை அஜீரண கோளாறாக இருக்கலாம் என்று நினைத்து உறவினர்கள் மாப்பிள்ளைக்கு சோடா வாங்கி வந்து தந்தனர்…

. ஆனால், சோடா குடித்ததும், சுயநினைவை இழந்த மாப்பிள்ளை, திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்து மணப்பெண் அலறினார்..

சோடா
குடும்பத்தினர் பதறிப்போன உடனடியாக, கிராம மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அவரை பரிசோதித்த டாக்டர், ரத்தம் அழுத்தம் குறைந்து வருவதாகவும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறும் சொன்னார்..

இதையடுத்து,அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.. ஆனால், வழியிலேயே மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்..

தாலி கட்டிய கொஞ்ச நேரத்திலேயே, மணமகன் இறந்த நிகழ்வால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கிவிட்டது!

 

Share.
Leave A Reply

Exit mobile version