தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனக்கலவரங்களின் 39 ஆவது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
1983 ஆம் ஆண்டு , ஜூலை 23 ஆம் திகதி நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டது.
நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு பெரும் எண்ணிக்கையானோர் படுகாயம் அடைந்தனர்.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் ஆதரவுடன் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்றையதினம் காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்றது.
இந்நிலையில், 1983 ஜூலையில் கொடூரமாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை அடையாளப்படுத்தும் வகையில் கலைஞர் பிரபுத்த தனுஷ்க காலிமுகத்திடலில் ஆற்றுகையொன்றை அரங்கேற்றியிருந்தார்.
படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து கலைஞர் பிரபுத்த தனுஷ்க என்பவரால் மேற்கொள்ளப்பட்ட வலிமிகுந்த கலைப்படைப்பாக மனதை உருக்கும் விதத்தில் அரங்கேற்றியிருந்தார்.