இலங்கையின் முன்னாள்
ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய
ராஜபக்ஷவை யுத்தக் குற்றங்களில்
ஈடுபட்டமைக்காக உடனடியாகக்
கைது செய்யுமாறு கோரி, சர்வதேச
உண்மை மற்றும் நீதிக்கான
செயற்றிட்டத்தின் சட்டத்தரணிகள்,
சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம்
குற்றவியல் முறைப்பாடொன்றை
சமர்ப்பித்துள்ளனர்.
சர்வதேச உண்மை மற்றும்
நீதிக்கான செயற்றிட்டம், இன்று (24)
வெளியிட்ட அறிக்கையிலேயே
இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம்
இடம்பெற்ற காலத்தில், பாதுகாப்புச்
செயலாளராக கடமையாற்றிய
கோட்டா, ஜெனீவா ஒப்பந்தங்களை
கடுமையாக மீறினார் என்று
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவை, உலகளாவிய சட்ட அதிகார
வரம்பின் கீழ், சிங்கப்பூரில்
உள்நாட்டு விசாரணைக்கு
உட்படுத்தக் கூடிய குற்றங்கள்
என்றும் 63 பக்க குற்றவியல்
ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.