மட்டக்களப்பு தன்னாமுனையில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் (26) இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் )அண்ணன், தம்பி) இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் தன்னாமுனை பகுதியில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் சத்துருகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் எனவும். டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதையடுத்து குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

</div>

Share.
Leave A Reply

Exit mobile version