துருக்கி நாட்டின் அன்காரா நகரில் இருந்து ஜெர்மனியில் உள்ள நகரை நோக்கி, கடந்த சில தினங்களுக்கு முன் விமானம் ஒன்று சென்றுள்ளது.

அப்போது, அந்த விமானத்தில் இருந்த விமான ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு மத்தியில், பாம்பின் தலை இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ந்து போய் உள்ளனர்.

அது மட்டுமில்லாமல், அங்கிருந்து அவர்கள் இது தொடர்பான வீடியோவை எடுத்தும் இணையத்தில் வெளியிட, நெட்டிசன்கள் மத்தியில் கடும் பேரதிர்ச்சியை இந்த சம்பவம் உண்டு பண்ணி உள்ளது.

உணவு உண்ணும் வேளையில் பாம்பின் தலையை காய்கறிளுக்கு மத்தியில் அவர்கள் கண்டதால், கடும் அருவருப்பும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் இது போன்ற உணவு வழங்கப்பட்டதால், இந்த விஷயம் மிகப்பெரிய விவகாரமாக வெடித்துள்ளது.

பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் விமான நிறுவனம் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, உணவின் நடுவே பாம்புத் தலை இருந்தது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் என்றும், இதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கடந்த 30 ஆண்டுகளாக தங்களின் விமான சேவையில், இது போன்று ஒரு முறை கூட எந்தவித சம்பவமும் நிகழ்ந்தது கிடையாது என்றும், பயணிகளுக்கு தரமான சேவைகளை வழங்குவதையே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் விமான நிறுவனம் ரத்து செய்து, இதற்கான விளக்கத்தையும் அவர்களிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக கேட்டரிங் நிறுவனமும் தங்களது தரப்பில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தங்களின் தரப்பிலிருந்து எந்தவித தவறுகளும் நிகழவில்லை என இந்த குற்றச்சாட்டையும் அவர்கள் மறுத்துள்ளனர்.

மேலும், தங்களது நிறுவனத்திற்கு அவப்பெயர் உருவாக்க தான், யாராவது இப்படி ஒரு செயலை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

பின்னணி எதுவாக இருந்தாலும், விமான ஊழியர் ஒருவருக்கு உணவு பரிமாறப்பட்ட சமயத்தில், அதற்கு நடுவே அதில் பாம்பின் தலை இருந்த சம்பவம், கடும் பீதியை கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version