நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்திற்கு அமைய (QR System) விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வேன், கார்களுக்கு 20 லிட்டர் வரை டீசல் அல்லது பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு 05 லிட்டர் டீசல் அல்லது பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமைய ஒரு வாரத்திற்கு மோட்டார்சைக்கிளுக்கு 4 லிட்டர் பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பஸ்களுக்கு வாராந்தம் 40 லிட்டர் டீசல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமைய லொறிகளுக்கு வாராந்தம் 50 லிட்டர் டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version