• ஜூலை மாதம் 4-ந்தேதி மட்டும் ரூ.6 கோடியே 18 லட்சம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

• 34 ஆயிரத்து 436 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். திருப்பதி ஏழுமலையான்

கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானம் சராசரியாக ரூ.120 கோடியை தாண்டுவதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதன்படி திருமலை-திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் கடந்த ஜூலை மாதத்தில் அதிகபட்ச வருமானமாக 29 நாட்களில் ரூ.131 கோடியே 76 லட்சம் கிடைத்துள்ளது.

இது, வரலாற்றுச் சாதனை என்று தேவஸ்தான அதிகாரிகள் பெருமிதத்துடன் கூறினர். மேலும் ஜூலை மாதம் 4-ந்தேதி அன்று ஒரேநாளில் ரூ.6 கோடியே 18 லட்சம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் 81 ஆயிரத்து 287 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 436 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 83 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version