வீட்டுப் பாடங்களை மாணவன் செய்யவில்லை எனத் தெரிவித்தே பெரியளவிலான தடி ஒன்றினால், ஆசிரியர் அந்த மாணவனை தாக்கியுள்ளார்.
இதனால் கையில் காயமும் வீக்கமும் ஏற்பட்டுள்ளது. உடம்பில் உட்காயங்கள் காரணமாக மகன் பாதிக்கப்பட்டுள்ளார் என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உப அதிபரின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு தனது மகன் அந்தப் பாடசாலைக்கு செல்வதனை விரும்பவில்லை. எனவே வேறு பாடசாலை ஒன்றில் மகனை இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
மேற்படி விவகாரம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது. அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதை நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
அத்துடன், இதுதொடர்பில் கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.