தமிழகத்தில் அரசு வேலைக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்துவது போன்று கேரளத்தில் பி.எஸ்.சி தேர்வு நடத்தி அரசுப் பணி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பி.எஸ்.சி தேர்வு முடிவுகளில் 42 வயது அம்மாவும், 24 வயது மகனும் தேர்வாகி, இருவருக்கும் அரசு வேலை கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் அரிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்து (42)-வும், அவரின் மகன் விவேக்கும் (24) பி.எஸ்.சி தேர்வு எழுதியிருந்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான லாஸ்ட் கிரேட் அசிஸ்டன்ட் (எல்.ஜி.எஸ்) ரேங்க் பட்டியலில் 92-ம் ரேங்க் பெற்று அரசு வேலைக்குத் தகுதி பெற்றுள்ளார் பிந்து.
சில நாள்களுக்கு முன்பு வெளியான எல்.டி.சி ரேங்க் பட்டியலில் பிந்துவின் மகன் விவேக் 38-ம் ரேங்க் பெற்று அரசு பணிக்கு தகுதிபெற்றுள்ளார்.
பிந்து 11 ஆண்டுகளாக அங்கன்வாடி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பிந்துவுக்கும், அவரின் மகனுக்கும் அரசு வேலை கிடைக்க உள்ளது.

இதுபற்றி பிந்து கூறுகையில், “என் மகன் 10-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் 2014-ம் ஆண்டு என் மகனுக்கு உதவுவதற்காக நானும் படிக்கத் தொடங்கினேன்.
அப்போது நான் அன்றைய எல்.டி.சி தேர்வு எழுதினேன். பின்னர் 2017-ல் எல்.ஜி.எஸ்-ல் 684-வது ரேங்க் பெற்றேன். வேலை கிடைக்கும் என நான் நினைத்திருந்தேன்.
ஆனால், ரேங்க் லிஸ்ட் கட்டானதால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது.
அதன் பிறகு, என்னை படிக்கச் சொல்லி மகன் வலியுறுத்தி அழைத்து வந்தான். மகனின் பைக் பின்னால் அமர்ந்து கோச்சிங் சென்டருக்கு படிக்க வந்தேன்.
அம்மாவும் பையனும் ஒன்றாக பைக்கில் கோச்சிங் சென்டருக்கு வருவதை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். நான் ஹார்ட்வொர்க் செய்வேன், என் மகன் ஸ்மார்ட் வொர்க் செய்வான்.
நான் ஏற்கெனவே அங்கன்வாடி ஆசிரியர் பணி செய்து வருகிறேன். அங்கன்வாடி ஆசிரியராக மாநில விருதும் பெற்றுள்ளேன்.
தினமும் காலை 9.30 மணி முதல் 4 மணி வரை எனக்கு வேலை உண்டு. அங்கன்வாடிக்கு நடந்து செல்லும்போது முந்தைய நாள் படித்ததை சிறு குறிப்பு எடுத்த பேப்பரை கையில் வைத்திருப்பேன்.
அதைப் படித்தபடி செல்வேன். அங்கன்வாடி சென்று சேரும் முன் அது மனப்பாடம் ஆகிவிடும். நான் பி.எஸ்.சி எழுத தொடங்கும்போது 10-ம் வகுப்புதான் படித்திருந்தேன்.
அதன் பிறகுதான் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினேன். எனவே படிப்போ, வயதோ வெற்றிக்குத் தடை இல்லை.
நாம் மனது வைத்தால் எல்லாம் நடக்கும். நாம் எவ்வளவு முயற்சி எடுக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்கும். முயற்சி செய்யுங்கள், முயன்றால் எப்படியும் வெற்றி கிடைக்கும்” என்றார்.
ஒரே சமயத்தில் அரசு வேலை கிடைத்த அம்மாவும் மகனும்
அம்மாவுடன் தேர்வுக்குத் தயாராகி வெற்றியும் பெற்ற விவேக் கூறுகையில், “எனது முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றுவிட்டேன்.
நன் டிகிரி படித்து முடித்துவிட்டு பி.எஸ்.சி தேர்வு எழுத வந்தேன். தேர்வுக்குத் தயாராகும்போது எனக்கு சந்தேகம் ஏற்பட்டால் அம்மாவிடம் கேட்பேன்.
அம்மாவுக்கு சந்தேகம் வந்தால் என்னிடம் கேட்பார். மற்றபடி தனித்தனியாக அமர்ந்துதான் படிப்போம்.
வேலைக்குச் சேர்ந்த பிறகு, எங்கள் நண்பர்களிடம் சொல்லலாம் என நினைத்தோம். சமூக வலைதளங்களில் எங்கள் போட்டோ வைரலானதால் அனைவரும் அழைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்” என்றார்.
அரசு அலுவலர்களாக விருக்கும் அம்மா – பையன் இருவருக்கும் வாழ்த்துகள்!