இந்தக் கலாசாரம் கர்னாட் வம்சத்தின்போது ராஜா ஹரி சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. பல கோத்திரங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையே கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்தவும், வரதட்சணை இல்லாத வகையில் திருமணங்களை நடத்துவதற்கும் இந்தச் சந்தை தொடங்கப்பட்டுள்ளது.

`வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் இந்த இரண்டையும் அதிக கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். கல்யாணம் என்பது காலம் காலமாகவே மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்பட்டு வருகிறது.

இருவீட்டாருக்கும் பிடிக்க வேண்டும், மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் பிடிக்க வேண்டும். எல்லாமே கைகூடி வந்தால்தான் அடுத்தகட்டமாக திருமணமே நடக்கும்.

ஆனால் திருமண வயதில் உள்ள மணமகன்கள் அனைவரும் ஒரு சந்தையில் விற்கப்பட்டால் எப்படி இருக்கும்…? கற்பனையே கண்ணைக் கட்டுதே…. என நீங்கள் நினைப்பது புரிகிறது.

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் தான் `இங்கு மணமகன்கள் விற்பனைக்கு கிடைப்பார்கள்’ என்பதுபோல சந்தை ஒன்று நடத்தப்படுகிறது. சௌரத் சபா (saurath sabha) என அழைக்கப்படும் இந்த நிகழ்வு சுமார் 700 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் பல மாவட்டங்களைச் சுற்றியுள்ள மைதில் பிராமணர்கள் (maithil brahmin) கலந்து கொள்வார்கள்.

இந்தக் கலாசாரம், கர்னாட் வம்சத்தின்போது ராஜா ஹரி சிங் என்பவரால் தொடங்கப்பட்டது.

பல கோத்திரங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையே கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்தவும், வரதட்சணை இல்லாத வகையில் திருமணங்களை நடத்துவதற்கும் இந்தச் சந்தை தொடங்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version