தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என பாங்காக் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி பேங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானம் தாய்லாந்தின் ஃபூகெட்டில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் பாதுகாப்பு காரணங்களால் விமானம் முவாங் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாகவும் பாங்காக் போஸ்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

முவாங் சர்வதேச விமான நிலையத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷ வந்தடைந்த பின்னர், தாய்லாந்து பாதுகாப்புப் படையினர் அவரை பாங்காக்கில் உள்ள ஒரு அறியப்படாத ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் தாய்லாந்து பாதுகாப்புப் பணியாளர்கள் சிவில் உடையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version