இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
பிலியந்தலை, கோரக்காபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொகுந்தர பிரதேசத்தில் உள்ள வீதியொன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அங்கு சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று தற்போது காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றைய மோட்டார் சைக்கிளை பொகுந்தர பிரதேசத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையொன்றில் வைத்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும், விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், விபத்து இடம்பெற்ற போது பல காட்சிகள் கைத்தொலைபேசியில் பதிவாகியுள்ளது.