இந்தோனேசியாவைச்  சேர்ந்த ஹஜி சொண்டனி என்ற 65 வயதுடைய முதியவரும் , பியா பர்லண்டி என்னும் 19 வயது யுவதியும் கடந்த மே மாதம்  திருமணம் செய்து கொண்டனர்.
கோடீஸ்வரான ஹஜி சொண்டனி, அந் நாட்டின் வழக்கப்படி பியா பர்லண்டிக்கு இலங்கை மதிப்பில்  5.57 கோடி ரூபாய் வரதட்சணை, வீடு மற்றும் வாகனம் கொடுத்து திருமணம் செய்திருக்கிறார்.
மேலும், திருமணத்திற்கான செலவுகளையும் மொத்தமாக அவரே செய்திருக்கிறார். இந்நிலையில் திருமணம் நடந்த இரு வாரங்களிலேயே அந்த பெண்ணிற்கு, அவரை பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவரும் விவாகரத்து செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version