அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் ஹஷான் குணதிலக்க ஆகியோரை 90 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (19) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version