வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்ற இராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கனகராயங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியினை சிவில் உடையில் வந்த இராணுவ வீரர் ஒருவர் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற வேளையில், போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் விரைந்து செயற்பட்ட அப்பகுதி பொதுமக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பறித்து சென்றவர் சிவில் உடையில் நடமாடிய இராணுவீரர் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்களால் கனகராயன்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா கனகராயங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version