வெலிமடை சாப்புகட பகுதியில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் அவரது மகள் வெலிமடை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி நேற்று (24) குறித்த பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

புரங்வெல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் வேறு ஒருவருடன் இணைந்து ஹோட்டல் ஒன்றினை நடத்தி வந்ததாகவும், அந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

அந்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்த நபர் குறித்த பெண்ணை கொலை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version