நேற்று வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் கல்வி கற்ற ஜெயச்சந்திரன் துவாரகேஸ் 3 A சித்திகளைப் பெற்று, மாவட்ட மட்டத்திலும் அகில இலங்கை ரீதியிலும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

சிறந்த விவாதியும் சிரேஸ்ட மாணவத் தலைவனும் ஆகிய துவாரகேஸ் 2012ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றவர் என்பதுடன், சாதாரண தரப்பரீட்சையிலும் 9 A சித்திகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version