சென்னை: கனடா நாட்டின் மர்காம் நகரில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது

அந்த அறிவிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் என்பது தனது பெயர் இல்லை என்றும் அதற்கான உண்மையான அர்த்தத்தையும் ரஹ்மான் கூறியுள்ளார். Recommended Video

நிஜப் பெயர்
திலீப் குமார் என்கிற தனது பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் (சுருக்கமாக) ஏ.ஆர். ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது இசையால் ஒட்டுமொத்த உலகத்தையும் கட்டிப் போட்டு ஏகப்பட்ட சர்வதேச ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தெருவுக்குப் பெயர்
கனடா நாட்டின் மர்காம் நகரில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களையும் அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் மர்காம் மேயர் உள்ளிட்ட பலரும் ஏ.ஆர். ரஹ்மானை கெளரவித்த போட்டோக்களையும் ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.

கனடாவில் அங்கீகாரம்
ஆஸ்கர் மேடையை அலங்கரித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு 100 ஆண்டுகால சினிமாவை முன்னிட்டு கனடாவின் மர்காம் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அங்கே மக்கள் முன்னிலையில் ஏ.ஆர். ரஹ்மான் உரையாற்றிய புகைப்படத்தையும் மர்காம் மேயர் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

ரஹ்மான் என் பெயரில்லை

இந்நிலையில், இது தொடர்பாக இன்னொரு நன்றிக் கடிதத்தையும் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

அதில், ஏ.ஆர். ரஹ்மான் என்பது என்னுடைய பெயரில்லை. அந்த பெயருக்கு அர்த்தம் கருணை. கருணையின் கடவுள் கனடா மக்கள் வாழ்வை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றட்டும் என பதிவிட்டுள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version