எஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவியொருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்திபெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி உயர்தர வர்த்தக பிரிவில் 3 ஏ தர சித்திகளை பெற்றுள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்த ரஷ்மி, தெல்ஒழுவ பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்றார்.

2012 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமை பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் எஹேலியகொட தேசிய பாடசாலையில் உயர்தர கற்கை நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 8 ஏ தர சித்திகளையும் ஒரு B தர சித்தியையும் பெற்றுள்ளார். தற்போது உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 ஏ தர சித்திகளை பெற்றுள்ளார்.

அத்துடன் 2017ஆம் ஆண்டு வியட்நாமில் இடம்பெற்ற Global IT challenge 2017 Super challenger என்ற சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version